அறிஞர் அறிமுகம்
ஷெய்க் நூஹ் கெல்லர்
ஷெய்க் நூஹ் கெல்லர் அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய சட்டத்துறை அறிஞரும் மொழி பெயர்ப்பாளருமாவார் (அறபு - ஆங்கிலம்).
ஷெய்க் அவர்கள் 1954 இல் அமெரிக்காவில் பிறந்தார்கள். அமெரிக்க கிறிஸ்தவராகப்பிறந்த இவர்கள் 1977 இல் புனித இஸ்லாத்தை ஏற்றார்கள். அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் தத்துவவியல் மற்றும் அரபு ஆகியவற்றைக் கற்றார்கள். தற்போது ஜோர்டானில் வசித்து வருகிறார்கள். கெல்லர் ஒரு ஸுபியாவார். சாதுலிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஷெய்க் அப்துற் றஹ்மான் அல் ஷாஹுரி அவர்களிடம் பைஅத் (உறுதி மொழி) பெற்றார்கள்.
ஷெய்க் கெல்லர் அவர்கள் மொழி பெயர்ப்பு செய்த முதலாவது புத்தகம் உம்தாத் அல் ஸாலிக் (Reliance of the Traveller). இந்தப்புத்தகம் ஷாபிஈ பிக்ஹ் சட்டம் பற்றியதாகும். இப்புத்தகம் 14 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அந் நாகிப் அல் மிஸ்ரி என்பவரால் எழுதப்பட்டது. ஷெய்க் கெல்லர் அவர்கள் மொழி பெயர்ப்பு செய்த இப்புத்தகம் எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தினால் சான்றிதழ் பெற்ற முதலாவது இஸ்லாமிய சட்ட புத்தகமாக இருக்கிறது. இப்புத்தகம் மேற்கத்தேய முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஷெய்க் நூஹ் கெல்லர் அவர்களின் வேறு புத்தகங்கள்:
- Sea Without Shore: A Manual of the Sufi Path
- A Port in the Storm: A Fiqh Solution to the Qibla of North America
- The Sunni Path: A Handbook of Islamic Belief.
- A Port in the Storm: A Fiqh Solution to the Qibla of North America
- The Sunni Path: A Handbook of Islamic Belief.
அறபு மொழியில் வெளியிட்ட சில புத்தகங்கள்:
- அவ்றாத் அல் தரீகா அல் ஷாதுலிய்யா
- தலா-இல் அல் ஹைராத்
- தலா-இல் அல் ஹைராத்
அத்துடன் ஷெய்க் அவர்கள் அமெரிக்காவில் வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான Islamic Magazine மற்றும் இணையத்தளமான masud.co.uk இல் கட்டுரைகளை எழுதி வருகிறார்கள்.
அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
No comments:
Post a Comment