அறிஞர் அறிமுகம்
ஷெய்க் பராஸ் ரப்பானி
ஷெய்க் பராஸ் ரப்பானி அவர்கள் கனடாவைச் சேர்ந்த இஸ்லாமிய சட்டத்துறை ஆய்வாளரும் மொழி பெயர்ப்பாளருமாவார். இவர்கள் பல்வேறு விடயங்களை அறபு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். இவர்களது பெற்றோர் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்டவர்கள்.
ஷெய்க் அவர்கள் நாடுகாண் பயணி என்று தன்னை விபரிக்கிறார்கள். காரணம் சிறுவயது முதல் தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கனடா, இங்கிலாந்து, எகிப்து, ஸ்பெயின் என்று பயணித்துள்ளார்கள்.
இவர்கள் முதன் முதலாவது ஆபிரிக்க ஒன்லைன் செய்தி சேவையான நியூஸ்-என் (News-N) ஐ நிறுவி நடாத்திச் செல்கிறார்கள்.
இவர்கள் கனடாவிலுள்ள டொரொன்டோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார மற்றும் வர்த்தக துறையில் கற்றவாறே இஸ்லாமிய கற்கையிலும் அதீத ஆர்வம் செலுத்தி வந்தார்கள். ஷெய்க் தலால் அல் அஹ்தாப் மற்றும் ஷெய்க் பைசால் அல் அஹ்தாப் போன்றவர்களிடம் இஸ்லாமிய கல்வியைப் பெற்றார்கள்.
1997 இல் ஷெய்க் பராஸ் அவர்கள் டொரொன்டோ பல்கலையில் பட்டம் பெற்ற பின்னர் தங்களது மனைவியுடன் டமஸ்கஸ் மற்றும் அம்மான் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்கள். அங்கு பிரபல அறிஞர்களான ஷெய்க் ஆதிப் கல்லாஸ், ஷெய்க் ஹஸ்ஸான் அல் ஹிந்தி, ஷெய்க் முஹம்மத் ஜும்ஆ, ஷெய்க் அக்ரம் அப்துல் வஹ்ஹாப், ஷெய்க் நூஹ் கெல்லார் ஆகியோரிடம் அறிவைப் பெற்றார்கள்.
பிறகு 2001 ஆம் ஆண்டிலிருந்து ஷெய்க் அவர்கள் ஒன்லைன் மூலமாக தனது குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்களின் கேள்விகளுக்கான பதில்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
அது யாஹு இணையத்தள குரூப் மூலமாக ஹன்பலி மத்ஹப் சார்பாக இருந்தது. அவர்களின் ஆசிரியர்களின் ஆலோசனையின் பிரகாரம் SunniPath இணையத்தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் கேள்விகளுக்கான பதில்களையும் ஒன்லைன் இஸ்லாமிய கற்கைகளையும் வழங்கி வருகிறார்கள்.
2007 இல் கனடா திரும்பிய ஷெய்க் பாராஸ் அவர்கள் அங்கு இஸ்லாமிய அறிவை விரைவாக பரவச்செய்ய வேண்டும் எனும் நோக்கத்துடன் SeekersGuidance அமைப்பை (www.SeekersGuidance.org) நிறுவினார்கள். அதன் மூலம் ஒன்லைனிலும், பகிரங்கமாகவும் இஸ்லாமிய அறிவைப் பரப்பி வருகிறார்கள். அந்த இணையம் மூலம் இலவசமாக பதிவு செய்து எல்லோருக்கும் ஒன்லைன் மூலம் 25 இற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பாட நெறிகளை பயில முடியும்.
ஷெய்க் அவர்கள் StraightWay Ethical Advisory இன் சட்ட ஆலோசகராகவும், பங்காளராகவும் இருக்கிறார்கள். 2012 இல் வெளியான உலகில் செல்வாக்கு பெற்ற 500 முஸ்லிம்களில் இவர்களும் உள்ளடங்குகின்றனர்.
ஷெய்க் பாராஸ் ரப்பானி அவர்கள் எழுதிய புத்தகங்கள் :
- Sufism & Good Character and Absolute Essentials of Islam: Faith
- Prayer, & the Path of Salvation According to the Hanafi School.
- Prayer, & the Path of Salvation According to the Hanafi School.
மற்றும் அமெரிக்காவின் Islamica Magazine சஞ்சிகையிலும் கட்டுரை எழுதி வருகிறார்கள்.
No comments:
Post a Comment